தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் வலியுறுத்தியுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கடந்த நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி இன்று இரண்டாவது நாளாக மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி நாளான இன்று கருத்து கேட்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு வர முடியாத மாணவர்களின் பெற்றோரிடம் வாட்ஸ்அப் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும் நேற்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் பலர் பள்ளிகளை திறக்க வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது கட்டாயம் என்று தகவல் வெளியாகியுள்ளது.