Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அரசு புதிய முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர்  அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |