தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட உடன் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட உடன் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு அனைத்திற்கும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் இது தொடர்பாக அச்சப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.