Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் ரத்து – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா தொற்று அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடியரசு தினம் என்பது ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என்பது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் அவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொது மக்களும்,  மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள்.

தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா பரவல் பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள்  பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.குடியரசு தின நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |