தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர், விலாசம்,வயது மற்றும் பிற தகவல்களை மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாக பதிவு செய்து அரசுக்கு வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்தோரின் இறப்பு, வாரிசு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.