தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வருகிற 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அது இன்று மாலை தெரிய வரும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.