Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. புதிய பரபரப்பு செய்தி… OMG…!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் தற்காலிகமாக அனைத்து வங்கிகளிலும் நகை கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளை திமுக மற்றும் அதிமுக போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்கள் பட்டியலை கூட்டுறவு துறை அதிகாரிகள் தயார் செய்து வருகிறார்கள். மேலும் இந்த அறிவிப்பு வெளியானதற்கு பிறகு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதனால் அவசரத் தேவைகளுக்கு கடன் பெற முடியாமல் மக்கள் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் கூறும்போது, “நகை கடன்களை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் பொதுமக்கள் அதன் மூலம் உடனடியாக பயன்பெறுவார்கள். ஆனால் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த தொகையை திருப்பித் தர 5 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் மொத்தமாக அந்த தொகையை தர மாட்டார்கள்.

இந்த அறிவிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசு இந்த தொகையை தர தாமதப்படுத்தும் நிலையில் டெபாசிட் செய்த உறுப்பினர்கள் பணத்தை கேட்கும்போது சிக்கல் ஏற்படும். அதுமட்டுமன்றி தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளில் இருந்து நேரடியாக நிதி பெறும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த பிரச்சனை கிடையாது. நகை கடன் ரத்து எந்த தேதி வரை கணக்கிடப்படும் என்று இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை.

அதனால் தற்போது வைக்கப்படும் நகைகளும் சேர்த்து ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் தற்காலிகமாக நகை கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி களில் தொடர்ந்து நகை கடன் வழங்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |