தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவுவதை தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை காரணமாக கொண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆகஸ்டு 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின்போது அனைத்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் காணொளி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து விடுதிகளும், இந்த நாட்களில் திறக்கக்கூடாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடை அமைப்பதற்கும், கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.