புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் நெருக்கடியில் சிக்கிய காங்கிரஸ் அரசால் புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் பேரவையிலிருந்து முதல்வர் நாராயணசாமி வெளியேறினார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.