Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் …!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

குறிப்பாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை என்பது வரலாறு காணாத விதத்திற்கு கடுமையாக உயர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் வேதனையையும் துயரத்தையும் தெரிவிக்கும் வகையில் நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை என்பது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை விட தற்போது குறைவான விலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கலால் வரி என்பது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அடிப்படை விலையை விட அதிகமாக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோலின் விலை என்பது நூறு ரூபாயை கடந்து இருக்கிறது. குறிப்பாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 33 ரூபாய் வீதமும்,  டீசலுக்கு 32 ரூபாய் வீதமும் கலால் வரி என்பது மத்திய அரசால் வசூல் செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது பெட்ரோலின் விலை என்பது உயர்ந்திருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலை என்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 800க்கும் அதிகமான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமானிய மக்கள் மற்றும் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் இந்த விலை உயர்வினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசு ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டு எதற்காக முந்தைய அரசை குறை சொல்லி வருகிறது என்ற கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார். ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி இப்படிப்பட்ட சூழலில் பெட்ரோல் விலை கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முழுமையாக குறைக்க வேண்டும். ஓரளவிற்காவது குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Categories

Tech |