தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அறிந்து கொள்ள ஏதுவாக ஜூலை 12ம் தேதி முதல் அவர்களுக்கு தனித்தனி வண்ணங்களுடன் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்துக்களில் திருக்குறள் பலகை வைக்கும் பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும். டீசல் விலை உயர்ந்துள்ள சூழ்நிலையிலும் பொது மக்களை பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.