Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: மக்கள் வெளியே போகாதீங்க…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இன்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கலாம். மேலும் கனமழை முன்னறிவிப்பை கருதி மக்கள் விழிப்புடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |