நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் மகளும் பிரபல கல்வியாளருமான பேராசிரியர் சித்ரா கோஸ் இன்று காலமானார்.
நேதாஜியின் அண்ணன் மகளான சித்ரா கோஷ்(90) கொல்கத்தாவில் இன்று காலமானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கல்விக்காகவும், இளம் தலைமுறையினர் நலனுக்காகவும் பாடுபட்டவர். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து கல்வி சேவையில் ஈடுபட்டு இருந்தார்.
அவர் ‘விமன் மூவ்மெண்ட் பாலிடிக்ஸ் இன் பெங்கால், ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ், லைஃப் அண்ட் டைமஸ் ஆஃப் சரத் சந்திர போஸ், ஓபனிங் அண்ட் குலோஸ்ட் விண்டோஸ் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.