Categories
தேசிய செய்திகள்

FlashNews: மீண்டும் பள்ளிகள் திறக்க கிரீன் சிக்னல்…. அரசு புதிய திட்டம்….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை பரிசீலித்தால் முதலில் தொடக்கப் பள்ளிகள் திறப்பது புத்திசாலித்தனமான செயலாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |