புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த பாரதிய ஜனதா கட்சியும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற என்ஆர் காங்கிரஸ் கட்சியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் புதுச்சேரி மாநில மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனையை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள். புதுச்சேரி அமைச்சர் இராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநரும் கடிதம் கொடுத்துள்ளோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.