தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டத்தை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவிதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு, பாடங்கள் குறைக்கப்பட்ட விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.