லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எனவே மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் இப்படத்தை வருகிற பொங்கலுக்கு திரையரங்கில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டதால் ரசிகர்களை உற்சாகமடைந்தனர். “ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கை அதிர வைக்கும். தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும் ‘என இந்த அறிவிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.