அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் நாளை முதல் பேருந்துகள் இயக்கபடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். 120க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் கூறியதால் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளை நாளை முதல் இயக்கம் மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் மக்களுக்கு பேருந்து வசதி இல்லை என்றால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிகவும் கஷ்டமாக இருக்கும். மேலும் ஏழை எளிய மக்கள் அரசு பேருந்தில் தான் பயணம் செய்து வருகின்றனர். மேலும் அரசு பேருந்து தனியாருக்கு தாரை வார்த்தால் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மேலும் தொழிசாங்கத்தில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.