டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர்.
மேலும் போராட்ட களத்தில் விவசாயிகளின் இறப்புகள் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் காசியாபாத்தில் உள்ள போராட்டக்களத்தில் 70 வயது விவசாயி ஒருவர் அங்குள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னை எல்லையிலேயே புதைத்துவிடுமாறும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார்.