Categories
கல்வி மாநில செய்திகள்

FlashNews: கட்டணம் அதிரடி உயர்வு – மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி …!!!

நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கன அறிவிப்பு வெளியாகியது. இதை அடுத்து 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணங்கள் ரூபாய் 3.85 லட்சம் முதல் ரூபாய் 4 லட்சம் வரை என கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஒரு கல்லூரிக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 4.15 லட்சம் வரை நிர்ணயித்தது.சில கல்லூரிக்கான கட்டணத்தை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |