Categories
தேசிய செய்திகள்

FlashNews: மூக்கு வழியே கொரோனா மருந்து – ஒன்றிய அரசு ஒப்புதல் …!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என்று  ANI செய்தி நிறுவணம் வெளியிட்டுள்ளது.

பூஸ்டராக பயன்படுத்த உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது அந்த மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி  நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. பூஸ்டர் ஆக பயன்படுத்தப்பட உள்ள இந்த புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |