Categories
மாநில செய்திகள்

FlashNews: பள்ளிகள் கிடையாது – அரசு அறிவிப்பு…!!

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்க திறக்கப்படாது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒன்பது மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தற்போது இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக மாணவர்கள் அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் பரவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |