விமானத்தில் முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளை ஊழியர்கள் குண்டுகட்டாக தூக்கி விமானத்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக பொதுமக்கள் தாமாக பொது இடங்களில் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகருக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் இருவர் ஊழியர்கள் எவ்வளவு சொல்லியும் மாஸ்க் அணிய மறுத்து உள்ளனர். விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை மாஸ்க் அணிந்திருந்தவர்கள். விமானம் பறந்த பின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில்,
மாஸ்க் அணியாமல் இருந்துள்ளனர். அத்தனை முறை ஊழியர்கள் எடுத்துக் கூறிய பின்பும் அவர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தது, சக பயணிகளிடம் நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பியது.
அதன்பின் வாக்குவாதம் செய்த இருவரையும் ஊழியர்கள் குண்டுக்கட்டாக தூக்கி விமானத்திலிருந்து இறக்கி விட்ட பின் விமானம் அட்லாண்டா நோக்கி புறப்பட்டது. இறக்கிவிடப்பட்ட பயணிகள் செலுத்திய பயண தொகையும் திரும்ப பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.