Categories
தேசிய செய்திகள்

“கோழிக்கோடு விபத்து” விமானம் இறங்க தடை….. விமான இயக்குனரகம் அறிவிப்பு….!!

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கேரளாவைப் பொறுத்தவரையில் அப்பகுதி மக்கள் கொரோனா,  மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் ஒருபுறம் அவதிக்குள்ளாகி வந்த சூழ்நிலையில்,

இந்த விபத்து அவர்களிடையே பெரிய அளவிலான பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக் காலங்களில் பெரிய ரக விமானங்கள் தரையிறங்க தடை விதித்து விமான இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |