Categories
உலக செய்திகள்

ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம்…. 43 பேர் பலி…. விசாரணைக்கு உத்தரவிட்ட பிலிப்பைன்ஸ் அரசு….

இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானவ் தீவிலிருந்து ஜோலோ தீவிற்கு  96 ராணுவ வீரர்களுடன் சி -130 ஹெர்குலஸ் விமானம் சென்றது. இந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 43 பேர் பரிதாமாக  உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சி-130 ஹெர்குலஸ் விமானமானது அமெரிக்க அரசாங்கம் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியுள்ளது. அத்துடன் இந்த விமானம் இராணுவ வீரர்களின் போக்குவரத்திற்காகவும், இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்ய பிலிப்பைன்ஸ் அராசங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |