Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்… மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. 132 பயணிகள் பலி…!!!

சீன நாட்டில் 132 பேருடன் சென்ற போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் உள்ள ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்குரிய போயிங் 737 விமானம் குன்மிங்  நகரத்திலிருந்து குவாங்சு நகரத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், விமான ஊழியர்களுடன் சேர்த்து சுமார் 132 பேர் இருந்தார்கள். விமானம், ஷூவாங் மாகாணத்தின் வுசோ  நகருக்கு அருகே இருக்கும் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் திடீரென்று விமானம் மலையில் மோதி, விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு குழுவினர், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 132 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |