Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் மோதி வெடித்து சிதறிய விமானம்…. மொத்த பயணிகளும் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்காவில் ஒரு விமானம் தொழிற்சாலையின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு அனைத்து பயணிகளும் மொத்தமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் ஜெனரல் மில்ஸ் தொழிற்சாலையின் மீது கோவிங்டன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து சென்ற சிறிய வகை விமானம் மோதியது. இந்த விபத்து இரவு 7:05 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ஆலை மீது மோதி சிதறிவிட்டது.

இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் மொத்தமாக எத்தனை பயணிகள் விமானத்தில் இருந்தார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆலையிலிருந்தவர்களுக்கு  எந்தவித பாதிப்பும் இல்லை என்று காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறியிருக்கிறது.

Categories

Tech |