Categories
உலக செய்திகள்

“கடலில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்!”…. குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு….!!

ஆஸ்திரேலியாவில் சிறிய வகை சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரெட் கிளிஃப் நகரத்திற்கு அருகில்  சிறிய விமானத்தை, 69 வயதுடைய விமானி இயக்கியிருக்கிறார். அந்த விமானத்தில், சதுப்புநில காடுகளுக்கு குழந்தைகள் 2 பேர் உட்பட மூன்று நபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த பயங்கர விபத்தில், விமானி உட்பட 4 நபர்களும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Categories

Tech |