Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. கேள்விக்குறியான பயணிகள் நிலை…!!!

சீன நாட்டில் சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய போயிங் 737 வகை விமானமானது குன்மிங் நகரத்திலிருந்து வுஜோ நகரத்திற்கு சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்டு சென்றிருக்கிறது. விமானம் குவாங்சி என்ற மாகாணத்தின் மலைப்பகுதியில் சென்ற சமயத்தில் திடீரென்று மலை மீது மோதியது.

இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமானத்தில் இருந்த பயணிகளின்  நிலை பற்றிய தகவல் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |