Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் உயிரிழப்பு.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில் ஒரு சிறிய விமானம், அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட, 8 நபர்கள் ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமானம், இத்தாலியில் உள்ள மிலன் புறநகர்ப் பகுதியில் இருக்கும்  அடுக்குமாடி கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் வாகனத்தில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பின்பு அப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பின்பு, விபத்துக்கான காரணம் பற்றி தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |