லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில், விமான விபத்து ஏற்பட்டு, விமானி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Benghazi நகரத்தில் லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் மிக்-21 என்ற போர் விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஜமமால் இப்னு அமர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லிபியன் தேசிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் Khalifa al-Obeidi, விமானியின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Libya_OSINT/status/1398733024754376709
லிபியன் தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான அகமது அல்-மிஸ்மாரி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் லிபியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு, Benghazi-ல் இருக்கும் ராணுவதளத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.