மூத்த ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டின் விமானப்படைக்கு பாத்தியப்பட்ட விமானத்தில் 16 மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் Mandelay நகரிliருக்கும் ஐகான் என்னும் கிராமத்தில் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 16 பேர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதாக மியான்மர் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த Mandelay நகரத்தின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து எந்த காரணத்தால் விமானம் விபத்துக்குள்ளானது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மியான்மர் விமானப்படையினர் இந்த விபத்து குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.