நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இருக்கும் போகாரா என்னும் நகரத்திலிருந்து 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமானமானது, சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த 4 நபர்களும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேபாள ராணுவத்தினர் விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து விமானம் சனோஸ்வெர் என்னும் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அங்கு மீட்புப்பணி நடைபெற்றது. இதில் தற்போது வரை 14 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.