நெதர்லாந்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் F-16 என்ற போர் விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருக்கும் Leeuwarden என்ற விமானதளத்தின் ஒரு கட்டிடத்தின் மேல் பெல்ஜியம் F16 என்ற போர் விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே விமானத்திலிருந்து விமானி வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/martopirlo1/status/1410526307386019840
நல்ல வேளையாக விமானம் கட்டிடத்தில் மோதிய சமயத்தில், வெடி விபத்தோ, தீ விபத்தோ ஏற்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், இந்த விபத்து ஏற்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.