ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையில் விழுந்து நொருங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் புறப்பட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பிராந்திய அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவில் இருத்து இன்று காலை l-140 விமானம் ஒன்று புறப்பட சில நிமிடங்களிலேய டிலாஷுடன் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது மேனிஸிலின்ஸ்க் நகருக்கு அருகில் நடந்துள்ளது.
உடனே மேனிஸிலின்ஸ்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அந்த விமானத்தில் 21 பேராசூட் வீரர்கள் மற்றும் இரு விமானிகள் என மொத்தம் 23 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் 2 விமானிகள் உட்பட 16 பேர் இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தானது தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.