Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்கள் சீருடைகளை அவிழ்த்து போராட்டம்.. இத்தாலியில் பரபரப்பு..!!

இத்தாலி நாட்டில் பணி இழப்பு மற்றும் குறைவான ஊதியத்தை எதிர்த்து, விமான பணிப்பெண்கள் பொது இடத்தில் சீருடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் ITA Airways என்ற புதிய தேசிய  விமான நிறுவனத்தின் சேவை கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டது.  இந்நிலையில், தற்போது இந்த விமானப் போக்குவரத்தில் முக்கியமான சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் Alitalia விமான ஊழியர்கள் பணிஇழப்பு மற்றும் குறைவான சம்பளத்தை எதிர்த்து, தங்கள் உடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரோம் நகரில், சுமார் 2,000 வருடங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த கேம்பிடோக்லியோவில் முன்னாள் விமானப் பணிப்பெண்கள் 50 பேர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள், தங்களது சீருடைகளை அவிழ்த்து விட்டு, உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |