போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்வதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.