இங்கிலாந்தில் ஒரு நபர் பழைய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை பார்ட்டி ஹால் போன்று வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.
இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற விமான நிலையத்தினுடைய தலைமை நிர்வாகியான Suzannah Harvey, ஒரு பழைய விமானத்தை £1 டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அதனை சீரமைப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்திருக்கிறார். விமானத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வடிவமைப்பதற்கு சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கிறது.
மேலும் அதனை வடிவமைக்க 50 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்திருக்கிறார். தற்போது அந்த விமானம் பார்ட்டி ஹாலாக மாறிவிட்டது. முழு நேர மதுக்கூடம், நடன ஹால் போன்று பல வகையான வசதிகளை அதில் வைத்திருக்கிறார். இந்த விமான பார்ட்டி ஹாலானது ஒரு மணி நேரத்திற்கு £1,000-த்திற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
இது, இந்திய மதிப்பின்படி ஒரு லட்சம் ஆகும். ஒரு பவுண்டு விலை கொடுத்து விமானத்தை வாங்கி, அதன் மூலமாக பல ஆயிரம் பவுண்டுகள் ஒரே நாளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், Suzannah.