நேருக்கு நேராக 2 விமானம் மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவில் நேற்று மதியம் 2 மணி அளவில் Idaho பகுதியில் ஏரி ஒன்றின் மேல் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டு ஏரியின் உள்ளே விழுந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு விமானங்களிலும் மொத்தமாகவே 8 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருப்பார்கள் என்றே நம்புவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்துக்குள்ளான விமானங்கள் ஒன்று Cessna 206 ரகம் என்பது தெரியவந்த நிலையில் மற்றொன்று பற்றிய விபரம் இதுவரை தெரியவில்லை.
அந்த சமயம் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்த ஜான் என்பவர் கூறுகையில் இன்ஜின் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு அவர் பார்த்த பொழுது விமானத்தின் இறக்கைப் தனியாக பிரிந்து ஏரியில் விழுந்ததையும் கூறியுள்ளார். விமானங்கள் மோதி கொண்டபோது ஏரியில் இருந்து 200 அடி உயரத்தில் பறந்தது தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.