மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ள தகவலை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ரஷ்யா நாட்டில் கப்ரோவ்ஸ்க் நகரில் ஆன்டனோவ் ஆன் -26 ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மாயமானது. இந்த நிலையில் கபரோவ்ஸ்க் நகருக்கு அருகில் ஸ்பார்டக் ஸ்கை என்ற ரிசார்ட்டுக்கு பக்கத்தில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 70க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்துள்ள தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் மோசமான வானிலேயே ஆகும் என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.