ராணுவ விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஒர்க் நகரிலிருந்து ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது நடுவானில் பரந்து கொண்டிருக்கும்போது. திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. குறிப்பாக அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சிக்காக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தீப்பிடித்தது கண்டவுடன் விமானத்தில் இருந்து வெளியே குதித்துள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் குதித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து எரிந்து விமானமானது கீழே உள்ள மூன்று வீடுகளின் மேல் விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குடியிருப்பு வாசிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மேலும் விழுந்த விமானிகளில் ஒருவர் தரையில் கிடந்துள்ளார். இதனையடுத்து மற்றொருவர் ஒயர்களுக்கு இடையே சிக்கியுள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.