ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானமானது பனி சறுக்கு தளத்தில் விபத்துக்குள்ளாகிய தகவல்கள் வெளியாகியுள்ளது
ரஷ்யாவில் khabarovsk நகரிலிருந்து AN-26 என்ற பயணிகள் விமானம் ஆறு பேருடன் புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது புறப்பட்ட சில நேரங்களில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் வேடாரில் மாயமாகியுள்ளது. மேலும் விமானமானது தகவல் தொடர்பு சாதனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து கோ விசிட் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து காட்டுப்பகுதியில் அதாவது பாஸ்ட் டேக் பனிச்சறுக்கு தளத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காலநிலை மாறுபாட்டால் Mi தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் தரை இறங்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் மீட்புக்குழுவினர் தரையிறங்க சரியான இடத்தைத் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தானது மோசமான காலநிலை அல்லது மின் பிரச்சினைகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் விவரம் குறித்த எந்த வித தகவலும் வெளிவரவில்லை.