பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
ரஷ்யாவில் சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் Ural Airlines விமானம் புறப்பட்டுச் சென்றது. தீடிரென்று சென்று கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானம் பெரும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் இன்ஜினில் சேதம் அடைந்ததால் மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 23 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து விமானத்திலிருந்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.