அமெரிக்காவின் துணை அதிபர் கமலா காரிஸ் பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நூட்பக்கோளாறால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசு முறை பயணமாக மெக்சிகோ மற்றும் கவுத்தமாலா நாட்டிற்கு செல்வதற்காக வாஷிங்டனிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து தனி விமானம் மூலம் அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் உடனடியாக அவசர அவசரமாக வாஷிங்டன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாற்று விமானம் மூலம் பயணத்தை மேற்கொண்டார். இதுக்குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில் நாங்கள் நலமுடன் உள்ளோம். மேலும் விமான கோளாறு ஏற்பட்டவுடன் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிறு பிரார்த்தனை செய்தோம் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் விமானப்படை தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.