பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக பெய்ஜிங் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர் விமானம் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலேயே தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து ஏர் பிரான்ஸ் விமானம் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.