ஜூலை மாதத்தின் இறுதிக்குள் சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் விமானிகளின் பற்றாக்குறையாலும், விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நோய்வாய்பட்டுருப்பதாலும், விமானங்களை பராமரிப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அந்நாட்டின் விமான சேவை நிறுவனம் சுமார் 303 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஆத்திரத்தை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் உலகிலேயே அதிக விமானங்களை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 3000 விமானங்களை ரத்து செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே உலக வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் சுமார் 35 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.