பிரிட்டனிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் ஆங்கில கால்வாயில் தேடிவருகிறார்கள்.
இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷயரில் இருக்கும் வெல்லஸ்போர்னிலிருந்து இரண்டு நபர்களுடன் P-28 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் Le Touquet என்ற பகுதியை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று மாயமானது. எனவே அந்த விமானத்தை தேடக்கூடிய பணி மதியம் முழுக்க நடந்ததாக பிரெஞ்சு கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. எனினும், தற்போது வரை மாயமான அந்த விமானத்தின் பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது.