பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ரஷ்ய நாட்டின் Voronezh-விற்கு திருப்பப்பட்டது. எனினும் விமானத்தில் குறைந்த எரிபொருள் இருந்ததால், மாஸ்கோவின் domodedovo விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.