விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதில் பயணம் செய்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 148 பயணிகளுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரிகிஷன் ரெட்டி இருந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென சென்னை பெரம்பூரில் வசித்துவரும் தயாளன் என்ற பணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.
இதுகுறித்து விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தவுடன் விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்பின் விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் சென்று அந்த பயணிக்கு சிகிச்சை அளித்த பிறகு அவர் மயக்கம் தெளிந்து எழுந்து விட்டார். ஆனால் தொடர்ந்து பயணம் செய்ய விரும்பவில்லை என அந்தப் பயணி கூறியதால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 146 பயணிகளுடன் அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளது.