Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை தமிழக விமான நிலையங்களில் தரையிறக்கணும்… திமுக மனு!!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர்.

நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு தமிழக அரசு உரிய ணனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி திமுகவின் மூத்த வழங்கறிஞர் நீதிபதி சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பான வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |